Monday, March 16, 2009

நான்


காதல் குழந்தையின் சிரிப்பு, தாயின் முத்தம், கோடை மழை, மழைநாள்வெயில், பெண்மை பற்றிய புரிதல், ஒரு ஏழை விவசாயியின் முதுமைச் சுருக்கம்...

வெறுப்பு மரணித்துப் போகும் என் ஆன்மா பற்றி நினைக்கையில், ஒரு பெண்ணின் புனர்தலுக்காய் அவள் காலடியில் என் காதலை மண்டியிட வைக்கிறேனே அப்போது.

சிந்தனை நீண்டு விசாலித்துப்போகும் நெடும்பாதை வெளி.. .. ..

நம்பிக்கை எங்கோ என்னுடன் பயணப்படும் தொலை நிலாவொன்றை காண்கையில் அழுகைதான் வருகிறது.. .. ..

உணர்தல் சாந்தப்படும் பின் இரவு தனிமையில் நான்.. .. ..

எண்ணம் நரம்புகள் சூல் கொள்கிறது பெண்மையும் ஆண்மையும் சேர்ந்தே செத்துப் போகிறது செத்துப் போகட்டும் விடு.. .. ..

Monday, February 16, 2009

தோல்வி.



Love :- தோல்வியை ஆதரிக்கிறேன்என் ஒவ்வொரு தோல்வியும் எனது வெற்றிக்காக என்னை செதுக்கும் சிற்பிகள் என்பதால்.

Hate :-தோற்றுவிட்டேன் என்று தெரிந்தவுடன் மனதிற்குள் உணரும் அந்த வலியை.

Feel :-என்னை மட்டும் ஏன் தோல்விகள் மட்டுமே அலங்கரிக்கின்றன?

Think :- தோல்வி என்ற ஒரு சொல் இல்லாமலே இருந்திருந்தால்?

Believe :-என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற ஒரு நம்பிக்கை...

Wish :-அடுத்த என் முயற்சியாவது வெற்றியை முத்தமிடட்டும்..

Tuesday, February 10, 2009

இரவு


Love: என்னிலிருந்து என்னை வேறாக்கி பரிணாமத்தின் உயர் படிநிலையொன்றில் என்னை ஏற்றும்.

Hate: காலில் ஊசி ஏற்றி என் நிலையை பாய் வரை இறக்கும் நுளம்புக்கு ஆகார அவகாசமளிக்கும். இந்த வேளைகளில் இரவு வெறுக்கப்படும்.

Think: இரவு தூங்க மட்டும் இல்லை; என்னை அளந்து பார்க்கவும்.

Believe: நாளையும் இரவு வரும். இதே சுகம் நாளையும்...

Feel: விடிந்து விட்டது; வழமை போல் இந்த இரவும் மிகவும் குறுகியது. இரவுகளின் நீளம் போதவில்லை எனக்கு.

Wish: நாளைய பகல் நாளை மறுநாளாவது வரட்டுமே... இந்த இரவு இப்படியே நீளட்டுமே...